தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Logo Creation Competition For College Students Details Inside

கல்லூரி மாணவர்களே… காத்திருக்கிறது ரூ.1 லட்சம் பரிசு… என்ன போட்டி?

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 02:31 PM IST

சுற்றுலா அமைப்புக்கான இலச்சினை (லோகோ) உருவாக்கும் போட்டியில் கலந்துகொண்டு ரூ.1 லட்சம் பரிசு பெற கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அழைப்பு விடுத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து யுஜிசியின் செயலர் மணீஷ் ஆர்.ஜோசி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டின் 75வது ஆண்டுசுதந்திர தின அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் யுவா சுற்றுலா அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இந்திய சுற்றுலாவுக்காக இளம் தூதர்களை உருவாக்கி, அவர்களுக்கு நாட்டில் உள்ள கலாச்சார பாரம்பரியமிக்க சுற்றுலா தளங்களின் பெருமையை தெரியப்படுத்தி ஆர்வத்தை அதிகப்படுத்துவதுதான் இந்த அமைப்புகளின் முக்கிய நோக்கம் ஆகும். 

இந்த யுவா சுற்றுலா அமைப்புக்கான இலச்சினையை (லோகோ) வடிவமைப்பதற்கான போட்டி, தற்போது 

https://www.mygov.in/task/desk/design-logo-yuva-tourism-club-0/ என்ற இணையதளத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

ரூ.1 லட்சம் பரிசு

இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், இப்போட்டி குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களை அதிக அளவு போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி 

தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதிவிகளுக்கு 30ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவித்துள்ளார் மேலும் விவரங்களை இணையத்தளத்தில் பெறலாம்.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வி துறை) மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவிகளுக்கு எழுத்து தேர்வு கடந்த 12.11.2022 மற்றும் 3.11.2022 நடைபெற்றது. எழுத்துதேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண். தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 15ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்த தரவரிசை எண்,  இடஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 30ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டி.என் பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரரின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் பெறலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்