உயர் சாதி பிரிவு மக்கள் வசிக்கும் தெருக்களில் செருப்பு அணிந்து சென்ற பட்டியல் சமூக மக்கள்!
கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் முதல் முறையாக அந்த ஊர் உயர் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களில் காலணியுடன் நடந்து சென்று, அந்த ஊரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கபடும் ராஜகாளியம்மன் கோவிலில் முதல்முறையாக வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ராஜாவூர் கிராமத்தில் உயர் வகுப்பினர் வசிக்கும் தெருவில் பட்டியில் இன மக்கள் முதல் முறையாக கடந்த ஞாயிற்று கிழமை காலணி அணிந்து நடந்து சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ளது ராஜாவூர் கிராமம். இந்த ஊரில் உள்ள 900 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 850 குடும்பத்தினர் இரண்டு உயர் சாதியை சேர்ந்தவர்கள். இதில் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் பட்டியல் சமூக மக்கள் வசித்து வருகின்றனர்.
உயர் சாதி பிரிவு மக்கள் வசிக்கும் தெருக்களில் சூனியம் வைத்துள்ளதால், பட்டியல் சமூக மக்கள் அந்த தெருக்களில் செருப்பு அணிந்து சென்றாலோ, இரு சக்கர வாகனங்களில் சென்றாலோ 3 மாதங்களில் ரத்த காவு வாங்கும், உயிரிழப்பு ஏற்படும் என நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பல தலைமுறைகளாக அந்த தெருக்களில் பட்டியல் இன மக்கள் நடமாடாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கடந்த ஞாயிற்று கிழமை, முற்போற்கு அமைப்பினை சேர்ந்தவர்களுடன் உயர் பிரிவினர் வசிக்கும் கம்பள நாயக்கர் தெருவில் நடந்து சென்றனர்.
கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் முதல் முறையாக அந்த ஊர் உயர் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களில் காலணியுடன் நடந்து சென்று, அந்த ஊரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கபடும் ராஜகாளியம்மன் கோவிலில் முதல்முறையாக வழிபட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக பார்க்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்