தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Lightning Strike Kills Two People In Madurai Districts

Madurai: மின்னல் தாக்கி 2 பேர் பலி; 20 பேர் படுகாயம்..இறுதி ஊர்வலத்தில் சோகம்!

Karthikeyan S HT Tamil
Nov 03, 2023 08:47 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே இறுதி ஊர்வலத்தின்போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மின்னல் (கோப்புபடம்)
மின்னல் (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பூஞ்சுத்தி அடுத்த கீரனூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி அய்யம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மூதாட்டியின் உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்று மயானத்திற்கு கொண்டுச் செல்லும் போது அப்பகுதியில், பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மழைக்காக புளிய மரத்தின் கீழ் 20 க்கும் மேற்பட்டோர் நின்று உள்ளனர். 

அப்போது மின்னல் தாக்கியதில், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீரனூர் கிராமத்தை சேர்ந்த செல்வா மற்றும் இளையராஜா என்ற அக்னி ராஜா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இறந்தவர் உடலை சுமந்து சென்ற போது மின்னல் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்