தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update : மக்களே.. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்!

Weather Update : மக்களே.. தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்!

Divya Sekar HT Tamil
Apr 12, 2024 07:26 AM IST

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மழை குறித்தான அப்டேட்
மழை குறித்தான அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

அதிகபட்ச வெப்பநிலை 

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

அதிக பட்ச வெப்பநிலை திருப்பத்தூரில் 41.8° செல்சியஸ் மற்றும் சேலத்தில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகளில் ஒருசில இடங்களில் 33° – 37° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 21° – 31° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 35.5° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.4° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை

தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

12.04.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.04.2024: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.04.2023 முதல் 16.04.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

12.04.2024 முதல் 15.04.2024 வரை

அடுத்த ஐந்து தினங்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

கோடையை இதமாக்கும் டாப் 10 டிப்ஸ் இதோ

வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் பருகி வர உடல் உஷ்ணம் தணியும்

தண்ணீரில் வெட்டி வேரை நறுக்கி போட்டு ஊறியதும் குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் இருக்காது

வெங்காயத்தை நறுக்கி, பசு நெய்யில் வதக்கி, காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சூட்டால் ஏற்படும் மூல நோய் குணமாகும்

வியர்வை நாற்றத்தால் அவதிப்படுவோர் தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து குளிக்கலாம்

மோரில் பச்சை மிளகாய்க்கு மாற்றாக சிறிதளவு சுக்கு பொடி சேர்த்தால், சுவை தூக்கலாகும், உடலுக்கும் நல்லது

கோடை காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்க கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலக்கி குடிக்கலாம்

கடும் வெயிலின் தாக்கத்தை தணிக்க வெள்ளரிக்காய் சாற்றுடன், பீட்ரூட் சாறு சேர்த்து பருகலாம்

பானை தண்ணீரில் கைப்பிடி அளவு நன்னாரி வேரை போட்டு வைத்தால் சுவையுடன் குளிர்ச்சி தரும்

கோடை காலத்தில் நன்னாரி சர்பத் குடிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்