TamilNadu Assembly: ’கள்ளச்சாராயம் காய்ச்சினால் இனி ஆயுள் தண்டனை!’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
TN Assembly 2024 Live: தமிழ்நாடு சட்டப்பேரவையில், மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளது

TamilNadu Assembly: ’கள்ளச்சாராயம் காய்ச்சினால் இனி ஆயுள் தண்டனை!’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை உடன் 10 லட்சம் அபராதம் விதிக்கும் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப் பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று ஆளுநர் உரை உடன் தொடங்கியது. பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துறைரீதியிலான மானியக் கோரிக்கை விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கி நடந்து வரும் நிலையில், இன்றுடன் நிறைவடைகின்றது.