’சகோதரரையே கண்டுபிடிக்க முடியாதவரா நிலக்கரி முறைக்கேட்டை கண்டுபிடிப்பார்?’ செந்தில் பாலாஜியை கலாய்க்கும் கே.எஸ்.ஆர்
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டன் நிலக்கரியை யாராவது முதலில் திருட முடியுமா இதை திருடுவதற்கு இருபதாயிரம் லாரி தேவைப்படும் மேலும் நிலக்கரியை திருடிக் கொண்டு என்ன செய்வார்கள்?

சொந்த சகோதரரையே கண்டுபிடிக்க முடியாத செந்தில் பாலாஜியா அனல் மின் நிலையத்தில் நடந்த நிலக்கரி திருட்டை கண்டுபிடிக்க போகிறார் என வழக்கறிஞரும், திமுக எதிர்ப்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.
செந்தில் பாலாஜி பேட்டி
வடசென்னை அனல் மின் நிலையத்தில் நடந்த நிலக்கரி திருட்டு குறித்து, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2021 ஆகஸ்ட் 20 அன்று பேசியதாவது: அங்கு 2.38 லட்சம் டன் (238,000 டன்) நிலக்கரி கணக்குகளில் இருந்தபோதிலும் இருப்பில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், மற்ற அனல் மின் நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.
மேலும் படிக்க | பொருளாதார ஆய்வறிக்கை: ’ஒரு ட்ரிலியன் டாலருக்கு வாய்ப்பே இல்லை! திமுகவின் பொருளாதார இலக்குகள் தோல்வி!’ விளாசும் ராமதாஸ்!
அவரது முந்தைய பேட்டியை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ட்வீட் செய்து உள்ளார். அதில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் வைத்திருந்த இரண்டு லட்சம் டன் நிலக்கரியை யாரோ 20000 லாரிகளில் வந்து ஏற்றி திருடி விட்டு சென்று விட்டார்கள்... அவர்கள் உடனடியாக இந்த ஆண்டு இறுதிக்குள் திருடிய இடத்தில் கொண்டு வந்து அந்த நிலக்கரியை கொட்ட வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி...
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டன் நிலக்கரியை யாராவது முதலில் திருட முடியுமா இதை திருடுவதற்கு இருபதாயிரம் லாரி தேவைப்படும் மேலும் நிலக்கரியை திருடிக் கொண்டு என்ன செய்வார்கள்?
அப்படி என்றால் இதில் என்ன நடந்திருக்கும், வாங்காமல் அதை வாங்கிவிட்டதாக கணக்கில் எழுதி விட்டு இப்போது காணாமல் போய்விட்டது என்று கதையை முடித்தாயிற்று என சொல்ல கொள்ளலாமே…
எந்தத் துறை கொடுத்தாலும் அதன் உச்சத்தை தொடும் அளவிற்கு விதவிதமாக ஊழல் செய்வதில் வல்லவர் இவர்..
காணாமல் போன இவர் தம்பியையே கண்டுபிடிக்க முடியவில்லை இவரால் இவர் எப்படி இவ்வளவு பெரிய நிலக்கரியை கண்டுபிடித்து விடுவார்கள் என்று இணையவாசிகள் தமாசு செய்கிறார்கள்... என பதிவிட்டு உள்ளார்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் குறித்த சர்ச்சை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் (ED) கைது செய்யப்பட்ட பின்னர், அவரது சகோதரர் அசோக் குமாருக்கு விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்