’சட்ட அமைச்சரா? திமுக பேட்டை ரவுடியா?’ அமைச்சர் ரகுபதியை விளாசும் அண்ணாமலை!
அமைச்சர் ரகுபதி அவர்களுக்கு காவல் துறையின் வேலை என்ன என்பதை சொல்லிக் கொண்டுக்க வேண்டும். வண்டலூரில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் காண்ஸ்டெபிள்கள் உடன் அமர்ந்து வகுப்பை கவனிக்க வேண்டும்.

’சட்டத்துறை அமைச்சரா?; திமுகவின் பேட்டை ரவுடியா?’ என அமைச்சர் ரகுபதியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்து உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திமுகவின் தொண்டனை விட அக்கட்சிக்கு அதிகம் வேலை செய்வது சபாநாயகர் அப்பாவுதான். சபாநாயகர் தனது இருக்கைக்கு நடுநிலையாக உள்ளாரா?, சட்டமன்றத்தை திமுக சார்பாக அவர் நடந்து கொள்கிறார் என்றார்.
கேள்வி:- துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு - ஆளுநர் இடையே கருத்து முரண் நிலவுகிறதே?
உச்சநீதிமன்றம், யூஜிசி ஆகியவை வழிகாட்டுதல் படி துணை வேந்தர் நியமனத்திற்கு யூஜிசி உறுப்பினர் வேண்டும் என்பது விதி. ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உள்ள பிரச்னையால் 6 பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் இல்லை. இதனால் பட்டமளிப்பு விழா பாதிக்கப்படுகின்றது. கல்வியில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்யவேதான் ஆளுநர் தலையீடு நடக்கிறது. அரசியல் செய்யும் அமைச்சரை ஆளுநர்தான் சரியான முறையில் வழிநடுத்துகிறார்.
