‘கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசுகிறீர்கள்.. பெண்கள் தூக்கியடிக்கும் கால்பந்து அல்ல’ குஷ்பூ ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசுகிறீர்கள்.. பெண்கள் தூக்கியடிக்கும் கால்பந்து அல்ல’ குஷ்பூ ஆவேசம்!

‘கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசுகிறீர்கள்.. பெண்கள் தூக்கியடிக்கும் கால்பந்து அல்ல’ குஷ்பூ ஆவேசம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 02, 2025 02:33 PM IST

‘இது முக்கியமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை. ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும் போது நாங்கள் பணம் கொடுக்கின்றோம், என்று கூறுகிறார்கள். நாங்கள் பாஜக அலுவலகத்தில் இருந்து பேசினாலும், நாங்கள் ஒரு பெண் என்று முறையில் பேசிக்கொண்டிருக்கிறோம்’

‘கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசுகிறீர்கள்.. பெண்கள் தூக்கியடிக்கும் கால்பந்து அல்ல’ குஷ்பூ ஆவேசம்!
‘கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசுகிறீர்கள்.. பெண்கள் தூக்கியடிக்கும் கால்பந்து அல்ல’ குஷ்பூ ஆவேசம்!

பாஜக மகளிர் அணி சார்பாக நாளை நீதி கேட்டு மாபெரும் நீதி பேரணி நடத்த இருக்கிறோம், இன்றைக்கு தமிழக முழுவதும் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை பார்க்க முடிகிறது, பள்ளி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உள்ள பெண்களுக்கு பாதுகாக்கப்பட்ட சூழல் இருக்கிறது. இதற்காக குரல் கொடுத்த விழிப்புணர்வுடன் இருங்கள் என்று கூறினால் அதற்காக அனுமதி அரசாங்கத்தால் மறக்கப்படுகிறது.

முதலமைச்சர் மவுனம் காக்கிறார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பாலியல் செயலில் ஈடுபட்டவர், திமுக பிரமுகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரை கைது செய்து விட்டு, இரவே அவரை விட்டுவிட்டார்கள். அவரை கைது செய்த பின், விட சொன்ன ‘யார் அந்த சார்?’ என்பது தெரியவேண்டும். இதை யார் செய்திருக்கிறார்கள் என்று காவல்துறைக்கும் தெரியும். ஆளுகின்ற அரசுக்கும் தெரியும். ஆனால் இதுவரையில் அனைத்து கட்சியும் போராடியும் முதலமைச்சர் மௌனம் சாதிக்கிறார்.

இதைக் கேட்டால் மணிப்பூரை பார் என்று கூறுகிறார்கள். மணிப்பூர் விஷயமே வேறு, இதே சம்பவம் நடந்து கொண்டிருக்கும் பொழுது, மற்றொரு பாலியல் கொடுமை நடந்திருக்கிறது. உங்கள் மாநிலத்தில் பல இடங்களில் இப்படி பாலில் ரீதியான விஷயங்கள் நடக்கும் பொழுது, வேறு மாநிலங்களில் நடப்பதை சுட்டிக்காட்டி திசை திருப்புவது ஏன்? இதற்கு கனிமொழி பதில் கூற வேண்டும்,

உங்கள் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் போராட்டமாக நடத்தினால் அதற்கு அனுமதி கொடுக்கிறீர்கள், ஆனால் இதற்கு நாங்கள் அனுமதி கேட்டால் அதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள். இன்றைக்கும் பாமக கட்சியினர் போராட்டம் நடத்த முயற்சி செய்து, பாமகவின் சௌமியா அன்புமணி அவர்களை கைது செய்துள்ளார்கள்.

ஆட்சிக்கு வரும் முன் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினீர்கள், ஆனால் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே போகிறது? ஆகவே பெண்கள் பாதுகாப்பிற்காக போராடும் எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். சாட்டையில் அடித்துக் கொண்ட அண்ணாமலையை குறித்து கேலி செய்து வருகிறார்கள். இது ஒரு உண்மையான போராட்டம், இது அரசியல் அல்ல. உண்மையான பெண்களுக்கான குரல் கொடுக்கும் போராட்டம்.

நாளை கண்டன பேரணி நடத்தவிருக்கிறோம். அந்தப் பேரணியில் குஷ்பூ சுந்தர் பேருரை ஆற்றுவார். பேரணியை தொடர்ந்து நடத்த விடாமல் எங்களை கைது செய்தாலும் நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்,’’ என்று பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியதாவது:

‘‘இந்த மாணவிக்கு நடந்த பிரச்சனை இத்துடன் நிற்க வேண்டும் என்பது எங்களது நோக்கம், மீண்டும் இதுபோன்ற பிரச்சனை தொடரக்கூடாது, 25 லட்சம் ரூபாய் அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளார்கள். ஆனால் அவர் இந்த சம்பவத்தை மறக்க முடியுமா? 25 லட்சம் கொடுத்துவிட்டோம், கல்வி கட்டணத்தை கொடுத்து விட்டோம் என்று சொல்வதால் அவளுக்கு ஏற்பட்ட அநியாயம் சரியாகிவிடுமா?

இது முக்கியமான சட்டம் ஒழுங்கு பிரச்சனை. ஒவ்வொரு முறையும் பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும் போது நாங்கள் பணம் கொடுக்கின்றோம், என்று கூறுகிறார்கள். நாங்கள் பாஜக அலுவலகத்தில் இருந்து பேசினாலும், நாங்கள் ஒரு பெண் என்று முறையில் பேசிக்கொண்டிருக்கிறோம். பெண்கள் ஒரு அரசியல் கால்பந்து கிடையாது,இங்கேயும் அங்கேயும் தூக்கி அடிப்பதற்கு!

அந்த குழந்தையை குறித்து அனைத்து தகவல்களும் வெளியே கொடுத்தவர்களை தண்டிக்க வேண்டும், இதை அரசியல் பிரச்சினையாக பார்க்காமல் இது ஒரு பெண்ணுக்கு நடந்த அநியாயமாக பார்க்க வேண்டும். மற்ற மாநிலங்களில் பெண்களுக்கான வன்கொடுமை அதிகமாக இருக்கிறதா அல்லது தமிழகத்தில் அதிகமாக இருக்கிறதா என்பதை ஒப்பிட்டு பார்க்காமல், தற்போது நமது மாநிலத்தில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

 கண்ணாடி வீட்டில் உட்கார்ந்து கொண்டு மற்றொரு வீட்டில் கல் கூடாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுத்து கேட்பவர்கள், போராடுபவர்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள். திமுக சார்பாக ஏதாவது பெண்கள் தெருவுக்கு வந்து குரல் கொடுத்தார்களா, மாநில பெண்கள் ஆணையம் சார்பாக இதுவரை யாரும் சென்று விசாரித்தார்களா? அது குறித்து இதுவரை அறிக்கை ஏதாவது வெளியிட்டார்களா?

நமது நாட்டில் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும். வெளிநாடுகளில் இருக்கும் சட்டத்தை நாம் அங்கு சென்று கடைபிடிப்பது போல் இந்தியாவில் கடுமையான சட்டத்தை கொண்டு வந்தால் இது போன்ற சம்பவங்களை தடுக்கலாம். வருடத்திற்கு 44,000 கோடி கல்வி கொள்கைக்காக மத்திய அரசு அளித்திருக்கிறது. அந்த பணம் எங்கே? திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வாக்குறுதி அளித்தார்கள், ஆனால் இப்பொழுது எந்த வாக்குறுதியும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை,’’ என்று குஷ்பூ பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.