கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாளிடம் விசாரணை
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜராகி உள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சிபிசிஐடி சிறப்பு விசாரணைக்கு குழுவினர் கையில் எடுத்தனர். இது வரை சுமார் 250 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நடந்த விசாரணையில் கடந்த ஜன 19 ஆம் தேதி சசிகலா கோடநாடு எஸ்டேட் வந்த போது, பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா ? என போலீசார் கேள்வி எழுப்பினார். ஆனால் சசிகலா ஏதும் கேட்கவில்லை என நடராஜன் கூறி இருந்தார்.
மேலும் கணினி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை குறித்தும் நடராஜானிடன் கேள்வி எழுப்பட்டு உள்ளது. அன்று மாலை விசாரணை நிறைவடைந்து.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற வீரபெருமாளை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியி இருந்தனர். அதில் இன்று மார்ச் 11 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதே போல அப்போதைய பாதுகாப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ் இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாபிக்ஸ்