Kodaikanal: கொடைக்கானல்: அதிகாரிகளுக்காக காத்திருந்த ஆர்.டி.ஓ
கோபமடைந்த வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தனது தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு காத்திருந்த அவலமும் ஏற்பட்டது
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வர தாமதத்தால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேசமயம் வருவாய் கோட்டாட்சியர் அதிகாரிகளுக்கா காத்திருந்த அவலமும் ஏற்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மேல்மலை கிராமங்களான கூக்கால்,கவுஞ்சி, மன்னவனூர், பூம்பாறை , தாண்டிக்குடி , பேத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் . அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை , வனத்துறை, மின்சார வாரியம் , காவல்துறை , கூட்டுறவுத்துறை , தோட்டக்கலைத்துறை , சுகாதாரத்துறை , ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளில் இருந்து அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் . ஆனால் வருவாய் கோட்டாட்சியர் குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டார் . ஆனால் சம்பந்தப்பட்ட துறை சேர்ந்த சில அதிகாரிகள் காலதாமதம் ஆகியும் கலந்து கொள்ளாமல் இருந்தனர் . சில அதிகாரிகள் மிக தாமதமாகவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர்.
இதனால் கோபமடைந்த வருவாய் கோட்டாட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தனது தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு காத்திருந்த அவலமும் ஏற்பட்டது . மேலும் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு முறையாக அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர் . வனவிலங்குகள் பிரச்சனை , தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் நலத்திட்டங்கள் குறித்த பிரச்சனை உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுக்களாக மீண்டும் அளித்தனர் . நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பதில் வழங்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார் .
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.