’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Kathiravan V HT Tamil
Published Apr 29, 2025 12:59 PM IST

அணை பலவீனமாக இருப்பதாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. இந்த பிரமாண பத்திரத்தில், புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது

’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
’முல்லை பெரியாறு அணையால் கேரள மக்களின் உயிருக்கு ஆபத்து!’ உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

புதிய அணைய்தான் ஒரே தீர்வு 

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அணை பலவீனமாக இருப்பதாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. இந்த பிரமாண பத்திரத்தில், புதிய அணை கட்டுவதே இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என கேரள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

152 அடி வரை நீர்த்தேக்க உரிமை இல்லை 

கேரள அரசு தனது பிரமாண பத்திரத்தில், முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் பலப்படுத்தும் பணிகள் மேற்கொண்டாலும், தமிழ்நாடு அரசு 152 அடி வரை நீர் தேக்க உரிமை இல்லை என்றும், 142 அடி வரை மட்டுமே நீர் தேக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அணையை பலப்படுத்துவது 140 அடி நீர் தேக்குவதற்கு மட்டுமே உதவும் எனவும் வாதிட்டுள்ளது.

ஜல்சக்தி அமைச்சக அறிவிப்பு சட்டவிரோதம் 

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு கலைத்தது சட்டவிரோதமானது என்றும் கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வால் அமைக்கப்பட்ட இந்தக் குழுவை கலைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனவும், ஜல்சக்தி அமைச்சகத்தின் அறிவிப்பு சட்டவிரோதமானது எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய போகிறது தமிழக அரசு 

தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு ஏற்கனவே அணை பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்திருந்தது. இருப்பினும், கேரள அரசு இந்தப் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து, அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் கேரள அரசின் வாதங்கள் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் நெருக்கமாக தொடர்புடைய முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனிக்கப்படுகின்றன.