Karuppasamy Pandian : அதிமுக பிரமுகர்.. முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்!
திருநெல்வேலி மாவட்டத்தின் அதிமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 76.

Karuppasamy Pandian : திருநெல்வேலி மாவட்டத்தின் அதிமுக முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார். அவருக்கு வயது 76.
அதிமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக கருப்பசாமி பாண்டியன் கடந்த 1972-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தார். கடந்த 1977-ல் ஆலங்குளம் தொகுதி, 1980-ல் பாளையங்கோட்டை தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக மக்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
கருப்பசாமி பாண்டியன் அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக வலம் வந்தார். அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்டார். கடந்த 2000ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் 2006 திமுகவில் இணைந்தார். திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2015-ல் தி.மு.க.வில் இருந்து கருப்பசாமி பாண்டியன் நீக்கப்பட்டார். பின்னர், 2016-ல் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து 2018ல் மீண்டும் திமுகவிற்கு சென்ற கருப்பசாமி பாண்டியன் 2020ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்ட கருப்சாமி பாண்டியன் இன்று அதிகாலை தூக்கத்திலேயே காலமானார். இது அவரது குடும்பத்தினரிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கருப்பசாமி பாண்டியன் மறைவிற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டாபிக்ஸ்