‘ஞானசேகரன் மட்டும் தனியாக செய்திருக்க முடியாது’ மாணவி விவகாரத்தில் சந்தேகம் கிளப்பும் கார்த்தி சிதம்பம்!
‘மகளிர் உரிமைத் தொகை 12 மாதங்களும் கொடுப்பதால் பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது பெரிய குறை இல்லை’

சிவகங்கை எம்.பி., கார்த்திக் சிதம்பர், காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
‘சீமான், வருண்குமார் இருவரும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமை செயலாளர், டிஜிபி தலையிட்டு சட்டம், நிர்வாக ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரே நாடு; ஒரு தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லை. இதனால் மசோதா நிறைவேறாது.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால் தான் சிபிஐ விசாரணை கேட்க வேண்டும். இந்த வழக்கில் தேவையில்லை. தொடர் குற்றவாளி எப்படி வெளியே இருந்தார் என்பது தெரியவில்லை. காவல்துறை என்ன செய்தது? இதில் அவர் தனிநபராக ஈடுபட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது. யாரேனும் உடைந்தையாக இருந்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும்.