‘பாஜகவின் கருப்பு கொடி போராட்டத்தை ஆதரிக்கிறேன்’ கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேட்டி!
‘நாங்கள் ஒற்றுமையாக நிற்போம், எங்கள் இருக்கைகள் எதுவும் குறையாமல் பார்த்துக் கொள்வோம். பாஜகவின் கருப்புக் கொடி போராட்டத்தை நான் வரவேற்கிறேன். அவர்கள் என்னை திகார் சிறைக்கு அனுப்பினாலும் நான் பயப்பட மாட்டேன்’

‘பாஜகவின் கருப்பு கொடி போராட்டத்தை ஆதரிக்கிறேன்’ கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் பேட்டி!
சனிக்கிழமை சென்னை வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், நாடாளுமன்ற தொகுதிகளுக்கான எல்லை நிர்ணயத்திற்கு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் நாடாளுமன்றத்தில் தங்கள் இடங்களை எந்த நிலையிலும் குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அப்போது அவர் கூறினார்.
மேலும் இந்த நடவடிக்கையை முன் எடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பாக பெருமிதத்தை வெளிப்படுத்திய சிவக்குமார், இந்த நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், அரசியலமைப்பையும் ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார் என்று கூறினார். சென்னை விமான நிலையத்தில் பேசும் போது, டிகே சிவக்குமார் பேசியதாவது: