தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மழை பொழிய போகுது.. ஆனால் இந்த பகுதிகளில் வெயில் சுட்டெரிக்குமாம்!
weather update : கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மிதமான மழைக்கு வாய்ப்பு ( கோப்புப்படம்)
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
அதிகபட்ச வெப்பநிலை :
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.