Kanimozhi: மீண்டும் தூத்துக்குடி தொகுதியா?..இன்று விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி எம்.பி!
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி இன்று விருப்பமனு அளிக்க உள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அந்த வகையில், திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விருப்ப மனு சமர்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் எம்.பி. மீண்டும் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் ஏராளமானோர் விருப்ப மனுக்களை திமுக தலைமை அலுவலகத்தில் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான கனிமொழி இன்று (பிப்.05) விருப்பமனு அளிக்க உள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கனிமொழி பெயரில் விருப்ப மனுவை சமர்பித்துள்ளனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் 50 பேர் கனிமொழி எம்.பி பெயரில் விருப்ப மனு சமர்பித்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி இன்று காலை விருப்பமனு அளிக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்