Kanimozhi : ‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanimozhi : ‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி

Kanimozhi : ‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி

Pandeeswari Gurusamy HT Tamil
Published Feb 16, 2025 05:58 PM IST

Kanimozhi : பாஜக ஆட்சி ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. எதிர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத மத்திய அரசு ஊடகங்களை முடக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டி உள்ளார்.

Kanimozhi : ‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி
Kanimozhi : ‘பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு திணிக்க முடியாது’ கனி மொழி எம்.பி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த கைது நடவடிக்கையை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டதாகவும் தமிழக மீனவர்கள் மீது பல கோடி ரூபாய் அபராதம் விதிப்பதை உடனடியாக ரத்து செய்யக் வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் திமுகவினர் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டச்‌ செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், முன்னாள் அமைச்சர்கள் சத்யமூர்த்தி, சுந்தர்ராஜன், மகளிரணி துணைச் செயலாளர் பவானி ராஜேந்திரன் , மீனவர் அணி மாநில துணை செயலாளர் ரவிச்சந்திரன் ராமவன்னி‌, மீனவ அமைப்புகளின் தலைவர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது,

"மக்களை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதே திமுகவின் அடிப்படை கொள்கை, மக்களைப் பிரிக்க வேண்டும் என செயல்படுவார்கள் அரசியல் பத்தி பேசக்கூடாது. ஜனநாயக நாட்டில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு மதித்து நடந்து கொள்ள வேண்டும் ஆனால் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் விதமாக மத்திய அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மும்மொழி கொள்கை என்பது கல்வி சார்ந்த திட்டம் பாதுகாப்பு துறை சார்ந்த திட்டம் அல்ல என்பதை அமைச்சர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டு வரும் நிலையில் பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில அரசின் ஆலோசனை இல்லாமல் யாராலும் திணிக்க முடியாது.

மக்கள் கட்டும் வரிப்பணத்தில் இருந்து நிதி அளிக்கப்படுக்கிறது அதனை மறுப்பதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எந்த உரிமையும் இல்லை. தமிழக மக்கள் ரத்தம் சிந்தி மொழி உரிமையை பெற்று வைத்துள்ள நிலையில் அதை மாற்றும் உரிமை மத்திய அரசுக்கு இல்லை. தமிழக மக்கள் எந்த மொழியை படிக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள் இது தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கம் அளித்துள்ளதாக கனிமொழி எம்பி தெரிவித்தார்

இந்த நிலையில் விகடன் இணையதளம் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, பாஜக ஆட்சி ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. எதிர் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத மத்திய அரசு ஊடகங்களை முடக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது" என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டி உள்ளார்.

Pandeeswari Gurusamy

TwittereMail
பாண்டீஸ்வரி குருசாமி, சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 15 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழகம், தேசம், லைப்ஸ்டைல், வெப்ஸ்டோரி, கேலரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் எம்.ஏ. ஜர்னலிசம் படித்துள்ள இவர், தீக்கதிர் நாளிதழ் மற்றும் டிஜிட்டலில் பணிபுரிந்ததை தொடர்ந்து 2023 ஜனவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.