அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!
காந்தி சாலையில் உள்ள தேரடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்ட திருத்தேர் ஆனது, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், கச்சபேஸ்வரர் கோயில், கங்கை கொண்டான் மண்டபம் ஆகிய பகுதிகளை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது.

அத்தி வரதர் திருத்தேர்: ’காஞ்சிபுரத்தை அதிரவிட்ட அத்தி வரதர் கோயில் தேரோட்டம்!’ விண்ணை பிளந்த கோவிந்தா கோஷம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளான இன்று, பிரம்மாண்டமான திருத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருவிழாவின் பின்னணி
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாள் திருவிழாவாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆறு நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்தது. ஏழாம் நாளான இன்று 72 அடி உயரமுள்ள, ஏழு அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட திருத்தேர் உற்சவம் நடைபெற்று வருகிறது.