Tamil News  /  Tamilnadu  /  Kamal Haasan Congratulates Actor Vijay Who Started A New Party

Vijay : 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள்.. புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Divya Sekar HT Tamil
Feb 03, 2024 08:09 AM IST

Kamal Haasan : மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து
புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு கமல்ஹாசன் வாழ்த்து

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. 

ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. 

மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம் என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்த நிலையில் அதற்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன், தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.வரும் 2026 தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வந்தார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மறைமுகமாக சமீப காலமாக சொல்லி கொண்டே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்