Kallakurichi :கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்.. பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு.. சிகிச்சை பெற்று வருபவர்களின் முழு விவரம்!
Kallakurichi Liquor Deaths : புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண்ணெரிச்சல், வயிற்று வலி, தலைவலி, உள்ளிட்டஉடல் உபாதைகள் ஏற்பட்டன. நேற்று முன்தினம் காலையில் இருந்து ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது.
மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
