தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi : கள்ளச்சாராய மரணம்.. பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக.. ஐகோர்டில் இன்று விசாரணை!

Kallakurichi : கள்ளச்சாராய மரணம்.. பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக.. ஐகோர்டில் இன்று விசாரணை!

Divya Sekar HT Tamil
Jun 21, 2024 08:30 AM IST

Kallakurichi Liquor Death : கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி குறித்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கள்ளச்சாராய மரணம்.. பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக.. ஐகோர்டில் இன்று விசாரணை!
கள்ளச்சாராய மரணம்.. பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு.. சிபிஐ விசாரணை கோரும் அதிமுக.. ஐகோர்டில் இன்று விசாரணை!

ட்ரெண்டிங் செய்திகள்

நேரம் செல்ல செல்ல தொடர்ச்சியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தடுத்து ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி உயிரிழக்க தொடங்கினார். தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி குறித்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 50 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, அதிமுக வழக்கறிஞர் மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விஷச்சாராய மரணங்கள்

அதில், 2021ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக விஷச்சாராய மரணங்கள் நிகழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டிலிருந்து கள்ளச்சாராய விற்பனை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் துணையுடன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலை முறையாக பிரேத பரிசோதனை செய்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் D. கிருஷ்ணகுமார், கே.குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி பணியிட மாற்றம்

மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை அமலாக்கத்துறை எஸ்.பி.செந்தில்குமாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழகம் முழுவதும் திடீர் சோதனை நடத்தவும் சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள் பற்றிய பட்டியல் தயாரித்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.