Tamil News  /  Tamilnadu  /  Judicial Remand Extended For Tn Minister Senthil Balaji On February 07, 2024

Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு இடியாய் இறங்கிய உத்தரவு..18-வது முறையாக காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Karthikeyan S HT Tamil
Jan 31, 2024 03:59 PM IST

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 18-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஜன.31) முடிவடைய உள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 18-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், " 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள ஒருவர் இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு செல்கிறீர்கள். கடை நிலை அரசு ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே, ஒரு நீதிபதிக்கு, குற்ற வழக்கில் தொடர்பிருந்தால், அவர் நீதிபதியாக தொடர முடியுமா? என தமிழக அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார். மேலும், சட்டம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து 18-வது முறையாக அவரது நீதிமன்ற காவலை பிப்ரவரி 7-ம் தேதி வரைநீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்