தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை - நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கருத்து

மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை - நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் கருத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 08, 2022 05:07 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் கிழமை நீதிமன்றத்தில் வருங்காலங்களில் வழக்கறிஞர்கள் ஆணையம் நியமிக்க கூடிய வழக்குகளில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கருத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி கிராமத்தில் உள்ள சர்வே எண்: 16746 நிலத்தை ஆய்வு செய்யக்கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி மாலதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று காளீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து இந்த நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு சர்வே எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரவும் அறிவுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணையில் நிலங்களை ஆய்வு செய்வதற்கு வழக்கறிஞர் ஆணையம் நியமிக்கப்பட்டு உத்தரவிட்ப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த நீதிமன்றம் தற்போது மனுதாரரின் சீராய்வு மனுவை அனுமதிப்பதாக உத்தரவிட்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அத்துடன், ஸ்ரீவில்லிபுத்தூர் கீழமை நீதிமன்ற நீதிபதியிடம் சில கருத்துக்களை சொல்ல விரும்புவதாக தெரிவித்த நீதிபதி, "நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி கடந்த சில நாள்களுக்கு முன்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான நாளை கொண்டாடினோம். இந்த வேலையில் மாற்றுத்திறனாளிகள் அனைத்தையும் எந்தவித தடையும் இன்றி அணுகுவதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். இதை நமது வீட்டிலிருந்தே தொடங்கினால் நிச்சயம் நடைமுறைப்படுத்த முடியும்.

எனவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வருங்காலத்தில் வழக்கறிஞர்கள் ஆணையம் நியமிக்க கூடிய வழக்குகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் பார் கவுன்சிலில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளி வழக்கறிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்" என கருத்து தெரிவித்தார்.