Job Vacancy : பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.. மாதம் 20 ஆயிரம் சம்பளம்.. முழு விவரம் இதோ!
வடசென்னையில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 2 பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் வெளியாகியுள்ளது.

வடசென்னையில் சமூக நலன் மற்றும் உரிமைத் துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் வெளியாகியுள்ளது.
சீனியர் கவுன்சலர்- இதற்கான கல்வித் தகுதி social work or psychologyயில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலாண்மை வளர்ச்சியில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ 20 ஆயிரம்.
இதற்கு உள்ளூரை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி கொடுக்கப்படும். ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
பன்முக உதவியாளர் - இந்த பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது. ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருத்தல் வேண்டும். விண்ணப்பிப்போருக்கு சமையல் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு மாத ஊதியமாக ரூ 6400 வழங்கப்படும்.
இந்த இரு பதவிகளுக்கும் உரிய சான்றிதழ்களுடன் பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை -1 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது oscnorthchennai@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதற்காக தகுதியுள்ளவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்