Job Opportunities : பட்டதாரியா நீங்கள்! வனத்துறையில் வேலை வேண்டுமா? – இதோ வாய்ப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : பட்டதாரியா நீங்கள்! வனத்துறையில் வேலை வேண்டுமா? – இதோ வாய்ப்பு

Job Opportunities : பட்டதாரியா நீங்கள்! வனத்துறையில் வேலை வேண்டுமா? – இதோ வாய்ப்பு

Priyadarshini R HT Tamil
Jul 11, 2023 05:23 PM IST

Job Opportunities : கோவை மாவட்ட வனத்துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்னர் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - கோவை மாவட்ட வனத்துறை.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி Technical Assistant, Data Entry Operator என்ற பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.

சம்பளம் - தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி - விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any degree, Diploma, B.sc, M.sc பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு - பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி - இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 14.07.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை - விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகிறது.

ஜூலை 12, 13இல் காளான், முருங்கையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளட்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 12 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது -

காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஜூலை 12, 13ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், முருங்கையில் இருந்து முருங்கைப் பொடி, பருப்புப் பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், காளானில் இருந்து காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி முதல் நாளன்று ரூ. 1,770 செலுத்த வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003 என்ற முகவரியிலும், 94885-18268 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.