Tamil News  /  Tamilnadu  /  Job Opportunities For Lawyers At Ramanathapuram
கோப்புப்படம்
கோப்புப்படம்

வசதியற்றவர்களுக்கு ஆதரவாக வாதிட வக்கீல்கள் தேவை - விண்ணப்பிப்பது எப்படி?

19 March 2023, 14:43 ISTPriyadarshini R
19 March 2023, 14:43 IST

Job Alert : ராமநாதபுரம் மாவட்டத்தில் வசதியற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குஆதரவாக வாதிட வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவிதுதுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வசதியற்ற குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குஆதரவாக வாதிட வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவிதுதுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள விவரம் :

குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாதிட முழுநேர அரசு வழக்கறிஞர்கள் இருப்பதுபோலவக்கீல்கள் வைத்துக்கொள்ள வசதியற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிட முழு நேர வக்கீல்களைநியமிக்க புதிய திட்டத்தை தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டசட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு ஒரு தலைமை சட்டஉதவி வக்கீல், 2 சட்ட உதவி வக்கீல், 3 உதவி வக்கீல் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த வக்கீல்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இணையதள முகவரி அல்லது மாவட்ட நீதிமன்ற இணைய தள முகவரிஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் நேடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ வரும் 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்