தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Job Opportunities And Army School Admission At One News

Job Opportunities : ‘டிஎன்பிஎஸ்சி மொழித் தேர்வு‘ - யார் விண்ணப்பிக்கலாம்?

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 12:45 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அரையாண்டு மற்றும் மொழித் தேர்வுகளுக்கு அரசுப் பணியில் உள்ள தேர்வர்கள் ஏப். 3ம் தேதிக்குள் இணைவழியில் விண்ணப்பிக்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்திந்திய பணிகள் மற்றும் தமிழ்நாடு மாநில பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அரையாண்டு மற்றும் மொழித்தேர்வுகள் ஏப்ரலில் நடைபெறவுள்ளது.

இந்த அரையாண்டு தேர்வுகள், அனைத்திந்திய பணிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலப் பணிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கென மொழித்தேர்வுகள் ஏப் 17 முதல் 21ம் தேதி வரையும், குரல் தேர்வு ஏப் 28ம் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னையில் மட்டுமே நடைபெறும். 

இத்தேர்வுகளுக்கு தேர்வர்கள் இணையவழியில் www.tnpsc.gov.in ஒருமுறை பதிவு மூலம் ஏப்.3ம் தேதி மாலை 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தேர்வு கட்டணமாக பிரதி தேர்வு அல்லது மொழிக்கு ரூ. 5 எனவும், தட்டச்சு செய்யப்பட்ட அல்லது எழுத்துப்பூர்வமாக அனுப்பப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுகள் தற்போது பணியில் இருப்போரால் மட்டுமே எழுத இயலும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதே செய்தியில் மேலும் ஒரு கல்வி செய்து இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து அதையும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்…

ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ராணுவக் கல்லூரியில் 2024ம் ஆண்டு சேர்க்கைக்கு (ஆண் / பெண்) இருபாலரும் ஏப் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதற்கான தகுதித்தேர்வு வரும் 3.6.2023 அன்று நடைபெறவுள்ளது. இந்தத் தகுதித் தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பது 22.2.2023 தொடங்கியது. 15.4.2023 வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு டேராடூனில் அமைந்துள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024ம் கல்வியண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். 

இதற்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றரை வயதை கடந்தவர்களும், 13 வயது பூர்த்தியான (2.1.2011 அன்று முதல் 1.7.2012 வரை பிறந்தவர்கள்) மாணவ, மாணவிகளில் தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதள முகவரியில் கூடுதல் விவரங்கள் பெற்று தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்