Job Opportunities : 10ம் வகுப்பு படித்தாலே போதும் தபால் துறையில் போஸ்ட் மாஸ்டர் வேலை – விவரங்கள் உள்ளே!
Job alert: நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. எனவே,ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பதவியின் பெயர் - கிளை போஸ்ட்மாஸ்டர், உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர்/அஞ்சல்பணியாளர்
காலியிடங்கள் - 12,828
கல்வித்தகுதி - குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும்.
10ம் வகுப்பில் விண்ணப்பித்தில் குறிப்பிட இருக்கும் உள்ளூர் மொழியை 10ம் வகுப்பில் ஒரு பாடமாக படித்திருக்கவேண்டும். அதேபோல் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்.
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்கவேண்டும்) அதிகபட்ச வயது 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)
பட்டியலின மக்களுக்கு (5 ஆண்டுகள்), பழங்குடியினர் (5 ஆண்டுகள்), இதர பிற்படுத்தப் பட்டவகுப்பினர் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள் (10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச்சலுகை அளிக்கப்படும்.
ஊதியம் மற்றும் படிகள் -
தற்போது புதிதாக முறைப்படுத்தப்பட்ட காலம் தொடரும் படிகள் அமைப்பு மற்றும் ஊதிய அளவுகள் கடைபிடிக்கப்படும் (Time Related Continuity allowance (TRCA) structure and slabs). கிளை போஸ்ட் மாஸ்டர் மாதம் ரூ. 12,000 உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர்/அஞ்சல் பணியாளர் மாதம் ரூ.10,000
தேர்வு செய்யப்படும்முறை -
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் (அதாவது 10ம் வகுப்பு) பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வருவதற்கான விண்ணப்பத்தை Rule3-A (ii) of GDS (Conduct and En- gagement) Rules, 2020இன்படி சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களுக்கு (ஜாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைப்பேசி எண்) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் -
தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ100 செலுத்த வேண்டும். அஞ்சல் வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/ விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ ஆகியவை மூலமாகச்செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.