Job Fair : சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் எங்கு நடக்கிறது – தகவல்கள் உள்ளே…
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் மார்ச் 25ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் வரும் 25ம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் தீனதயாள் உபாத்யாய கிராமீண் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் வரும் சனிக்கிழமை (மார்ச் 25ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் கலந்துகொள்ளலாம். எனவே தேவையானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.
இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் அலுவலகத்தை 04286-281131 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை வரும் 23ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்