Job Alert : ‘75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்’ 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
Job Alert: 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, சமூக நலத்துறை. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக இருக்கக்கூடிய 30 ஆயிரத்து 219 பணியிடங்களும் நிரப்பப்படும்.

‘46,584 பணியிடங்கள் நிரப்பப்படும்’ 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! (கோப்புப்படம்)
Job Alert : வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மொத்தம் 46 ஆயிரத்து 584 பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு,
பேரவை தலைவர் அவர்களே, இளைஞர் நலனை, இளைஞர் எதிர்காலத்தை, இளைஞர்களின் மேன்மையை எப்போதும் மனதில் வைத்து திட்டங்களைத் தீட்டி வருவது திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை! இளைய சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மிக மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகிறோம். அதனை அடிப்படையாகக் கொண்ட அறிவிப்பைத்தான் இப்போது வெளியிட விரும்புகிறேன்.