246 பவுன் நகை மோசடி -நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் கைது!
நெல்லையில் அடகு வைத்த 246 பவுன் நகையை மீட்டு வியாபாயிடம் ஒப்படைக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங் கோட்டை காய்கறி தோட்ட தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (42). இவர் காய் கறி வியாபாரம் செய்து வருகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள 246 பவுன் தங்க நகைகளை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் அடகு வைத்து இருந்தார். ஆனால் அதன் பின்னர் கொரோனா பரவல் காரணமாக வியாபாரம் போதுமானதாக இல்லை. இதனால் அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்டார்.
இதையடுத்து ரமேஷ் குமார் கே.டி.சி.நகர் பாலீன் தோட்டம் பகுதியை சேர்ந்த கோமதிநாயகம் (41) என்பவரிடம் நகைகளை திருப்புவதற்கு பண உதவி செய்யுமாறு கேட்டார். இதையடுத்து ரமேஷ் குமார் அடகு வைத்த நகைகளை கோமதிநாயகம் திருப்பினார்.
ஆனால் அந்த நகைகளை ரமேஷ் குமாரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் ரமேஷ்குமார் நகைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறும், அதற்கான பணத்தைதந்து விடுவதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் கோமதிநாயகம் நகைகளை கொடுக்கவில்லை.
இதையடுத்து கோமதிநாயகம் தனது அண்ணன் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கண்ணையாவிடம் இந்த பிரச்சினை குறித்து தெரிவித்தார். ரமேஷ்குமாரை அழைத்து நகைகளுக்காக ஏற்கனவே கொடுத்த பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நகைகளை திருப்பி கேட்கக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரமேஷ்குமார் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் பாளையங் கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கோமதி நாயகம், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் கண்ணையா ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.