DMK VS ADMK: ’சமூக ஆர்வலர் ஜெபகர் கொலை விவகாரம்! ஈபிஎஸ்க்கு ஏன் இவ்வளவு அவசரம்?’ அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!
சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை. லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? என கேள்வி

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜெபகர் அலி உயிரிழந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு அவசரம் என எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஜேசிபி மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ’எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார். புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அஇஅதிமுக ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள் , சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது