Top 10 News : பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.. முன் ஜாமின் கோரிய நடிகை கஸ்தூரி.. அமைச்சர் சேகர் பாபு ஆய்வு!
பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிய ஜெயக்குமார், முன் ஜாமின் கோரிய நடிகை கஸ்தூரி, குறளகம் கட்டப்படவுள்ள இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு ஆய்வு என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல், பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கூறிய ஜெயக்குமார், அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார் -உதயநிதி ஸ்டாலின்
நேரடி விவாதம் செய்ய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் நான் தயார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விவாதத்துக்கு அழைத்த எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்துள்ளார்.
தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்
2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்றவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கள ஆய்வு குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, வெளிப்படைத் தன்மை வாய்ந்த அறிக்கையை கட்சிக்கு உண்மையாக வழங்க வேண்டும். மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என கூற வேண்டும் என கூறினார்.