தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!
”பூத் கமிட்டி கூட்டம் மற்றும் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதில், தவெக தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக பனையூர் பட்சிகள் பேசிக் கொள்கின்றன”

தவெக தலைவர் விஜய் தனது ஜனநாயகன் திரைப்பட பணிகளை முடித்துவிட்டு தீவிர அரசியலுக்கு திரும்ப உள்ள நிலையில், கட்சிக்குள் பெரும் பிரச்னை சுழன்று வருவதாக பனையூர் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் ஜனநாயகன் படப்பிடிப்பு மற்றும் கட்சிப் பணிகள்
தவெக தலைவர் விஜய், தனது "ஜனநாயகன்" படப்பிடிப்பு பணிகளை 95% முடித்துவிட்டு, இம்மாதம் முதல் முழுமையாக கட்சிப் பணிகளில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக, தவெகவில் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ள 6 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்க உள்ளார். பின்னர், தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, கடலூரில் வடக்கு மண்டல பூத் கமிட்டி கருத்தரங்கக் கூட்டத்தையும், ஜூலை இரண்டாவது வாரத்தில் திருச்சியில் இரண்டாவது மாநில மாநாட்டையும் நடத்துவதே விஜயின் தற்போதைய ப்ளான்.