Crime: ஒரே மாதத்தில் தாய் வீட்டிற்கு திரும்பிய புது பெண்.. சடலமாக கிடந்த குடும்பம்.. கணவரிடம் விசாரணை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime: ஒரே மாதத்தில் தாய் வீட்டிற்கு திரும்பிய புது பெண்.. சடலமாக கிடந்த குடும்பம்.. கணவரிடம் விசாரணை

Crime: ஒரே மாதத்தில் தாய் வீட்டிற்கு திரும்பிய புது பெண்.. சடலமாக கிடந்த குடும்பம்.. கணவரிடம் விசாரணை

Aarthi Balaji HT Tamil
Feb 25, 2024 07:50 AM IST

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம்

இவருடைய மனைவி விமலா (55). இவர்களுக்கு தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். மகள் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

கடந்த நவம்பர் 3 ஆம் தேதி தனது மகள் தியா காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தீட்சித்திற்கு திருமணம் நடந்தது. தீட்சித் பெங்களூருவில் பணியாற்றி வருவதால் திருமணம் முடிந்தவுடன் தன் மனைவி தியா காயத்ரியுடன் பெங்களூரு சென்றுவிட்டார். திருமணமான ஒரு மாதத்திலேயே தியா காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த தியா காயத்ரி தன் பெற்றோர் வீட்டிற்கு ஒரு மாதத்திலேயே வந்துவிட்டார். மகள் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டிற்கு வந்தது பெற்றோருக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. இதை தனது தம்பிக்கு போன் செய்து கணேசன் புலம்பியதாக சொல்லப்படுகிறது. பின்னர் வெகு நேரமாக கணேசன் போனுக்கு தொடர்பு கொண்டும் எடுக்காத காரணத்தினால் தம்பிக்கு சந்தேகம் வந்து உள்ளது.

இதனால் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. கதவு தட்டப்பட்டு திறக்காத காரணத்தினால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது கணசேன், விமலா, தியா காயத்ரி ஆகியோர் சடலமாக கிடந்து உள்ளனர்.

இதனையடுத்து உடனே இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மூவரின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பேக்கரியில் இருந்து கேக் வாங்கிவந்து அதில் விஷத்தை தடவி மூவரும் சாப்பிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

காவல் துறையினர் நடத்திய சோதனையில் தியா கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது. அதில் எங்களது சாவுக்கு காரணமான யாரையும் சும்மா விடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தீர்வல்ல:

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.