NTK Seeman: ’திமுகவுக்கு வாக்களிப்பது முஸ்லீம்களின் 6அவது கடமை!’ சீமான் கிண்டல் பேச்சு!
அப்பா பாஷாவுக்கு மூத்த மகன் போல் நான் சென்றுவிட்டேன். எங்க அப்பா பாஷா குண்டு வைச்சது தப்பு. அதில் 50 பேர் செத்தது தப்பு. ஆனால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை பல ஆண்டுகளாக கொன்று குவித்தது யார்?
இஸ்லாமியர்கள் தங்களின் ஆறாவது கடமையாக திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.
‘சீமான், திருமாவளவன் போன்றோர் இஸ்லாமியர்களிடம் ஓட்டு பிச்சை எடுக்கின்றனர்’ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நாங்களாவது பிச்சை எடுக்கிறோம், நீங்கள் பிச்சு பிச்சு எடுக்கிறீர்கள். எனக்கு இஸ்லாமிய மக்கள் ஓட்டு போடவில்லை. ஆனால் தொடக்கத்தில் இருந்து அவர்களின் உறவுக்கார பிள்ளையாக நின்று சண்டை செய்கிறேன். இஸ்லாமியர்களை எதிர்பதை தவிர பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஒரு கொள்கை, கோட்பாடு உண்டா?, சமூகநீதிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. பாஜகவை சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க சொல்வாரா அண்ணாமலை என கூறினார்.
அப்பா பாஷாவுக்கு நான் மூத்த மகன்!
தொடர்ந்து பேசிய அவர், அப்பா பாஷாவுக்கு மூத்த மகன் போல் நான் சென்றுவிட்டேன். எங்க அப்பா பாஷா குண்டு வைச்சது தப்பு. அதில் 50 பேர் செத்தது தப்பு. ஆனால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்களை பல ஆண்டுகளாக கொன்று குவித்தது யார்?. நான் ஓட்டு பொறுக்குகிறேன் என்றால், அவர் யாருடைய ஓட்டை பொறுக்க கோவையில் பேரணி நடத்தினார் என்றார்.
திமுகவுக்கு ஓட்டு போடுவது 6அவது கடமை
ஆறாவது கடைமையாக திமுகவுக்கு ஓட்டுபோடுவது என இஸ்லாமியர்கள் முடிவு செய்துவிட்டனர். பாஜகவின் ஏ டீமாக திமுக உள்ளதால் நான் பாஜகவின் பி டீம் ஆனேன் என்றும் அவர் தெரிவித்தார்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறீர்களா என்ற கேள்வுக்கு பதில் அளித்த அவர், ஆயிரம் இருந்தாலும் அவர் எனக்கு தம்பி, அவரை இழுத்துவிடாதீர்கள். அதிமுகவை விட திமுகதான் என்னை பார்த்து பயப்படுகிறது என கூறினார்.