தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Is There Room In The Law For Tahsildars To Hold Peace Meetings?-judges Question

தாசில்தார்கள் சமாதான கூட்டம் நடத்த சட்டத்தில் இடம் உள்ளதா?-நீதிபதிகள் கேள்வி

Manigandan K T HT Tamil
Mar 15, 2023 08:01 PM IST

Madurai High Court Branch: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

ட்ரெண்டிங் செய்திகள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, உருவாட்டி கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா குறித்து அனைத்து சமுதாய மக்களை அழைத்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டங்கள் நடத்தி 6 ஆம் நாள் நிகழ்வில் மண்டப படி அமைத்து பூஜை செய்யவும் பழைய சப்பரத்தை பயன்படுத்தவும் அனுமதி கோரிய வழக்கில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியிலுள்ள உருவாட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மண்டபப்படிகள் அமைத்து பூஜைகள் செய்து வழிபடுவார்கள்.

இதற்காக கோயிலின் உள்பிரகாரத்திலும் வெளியிலும் சாமியை எடுத்து சுற்றிவர சப்பரம் (தேர்) உள்ளது.

இந்த முறை திருவிழாவில் தேவேந்திர குல வெள்ளாளர் சமூகத்திற்கு 9வது நாள் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் இந்த முறை திருவிழாவில் கோவிலில் சுற்றி வருவதற்காக கோவில் நிர்வாகத்தினர் புதிய சப்பரம் (தேர்) வாங்கி உள்ளனர்.

பழைய சப்பரம் (தேர்) நல்ல நிலையில் இருக்கும் நேரத்தில் புதிய தேர் வாங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தேவேந்திரன் குல வெள்ளாளர் சமுதாயம் சார்பில் மண்டகப்படிகள் அமைத்து பூ, மாலைகள் உடன் பூஜை செய்வதற்கு 6 ஆம் நாள் திருவிழாவில் அனுமதி வழங்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது எங்களை இழிவுபடுத்தும் விதமாக பேசினார்கள்.

எனவே, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, உருவாட்டி கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா குறித்து அனைத்து சமுதாய மக்களை அழைத்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டங்கள் நடத்தி 6 ஆம் நாள் நிகழ்வில் மண்டப படி அமைத்து பூஜை செய்யவும் பழைய சப்பரத்தை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், "சமாதான கூட்டம் நடத்துவதாக கூறி தாசில்தார்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என கருத்து தெரிவித்து.

தாசில்தார்கள் சமாதான கூட்டம் நடத்துவதற்கு அரசாணையோ அல்லது சட்டத்தில் இடம் உள்ளதா?" என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்