’விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?’ நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?’ நயினார் நாகேந்திரன் பேட்டி

’விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?’ நயினார் நாகேந்திரன் பேட்டி

Kathiravan V HT Tamil
Published Apr 30, 2025 02:03 PM IST

நல்ல கேள்வியை கேட்டு உள்ளீர்கள்! காஞ்சி காமாட்சி அம்மன் அருளால், இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும்

’விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?’ நயினார் நாகேந்திரன் பேட்டி
’விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?’ நயினார் நாகேந்திரன் பேட்டி

காஞ்சிபுரத்தில், தமிழக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் அஜித்குமாருக்கு மத்திய அரசு வழங்கிய பத்மபூஷன் விருது குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் குறித்தும் முக்கிய தகவல்களை வெளியிட்டார். அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறித்து உங்கள் கருத்து?

சிறந்த நடிகருக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. அஜித் மட்டுமல்ல, தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் மூன்று பேருக்கு பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. கிராமக் கலைகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மற்றும் சிறந்த சேவை புரிபவர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இந்த விருதுகளை வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, கலை, சேவை, தியாகம் ஆகியவற்றில் சிறந்தவர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதில் எப்போதும் முனைப்புடன் செயல்படுகிறது என தெரிவித்தார். 

 7ஆவது முறையாக திமுக ஆட்சி வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளாரே?

நல்ல கேள்வியை கேட்டு உள்ளீர்கள்! காஞ்சி காமாட்சி அம்மன் அருளால், இந்த ஆட்சி விரைவில் அகற்றப்படும். 

கள்ளக்குறிச்சியில் திமுக இளைஞர்களுக்கு மதுபான விருது அளித்து உள்ளதே?

அதுதான் திராவிட மாடல் ஆட்சி

தமிழகத்தில் தேர்தல் பணிகள் எந்த நிலையில் உள்ளன?

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. மு.க.ஸ்டாலின் வேண்டுமானால் ஆரம்பித்து இருக்கலாம். தேர்தல் என்று வரும்போது, மக்கள்தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்கள் தேர்தல் வேலைகளை ஆரம்பித்ததால் மட்டும் எந்த மாற்றமும் நடைமுறைக்கு வரப்போவதில்லை.

தமிழக வெற்றிக் கழகத்துடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த்டுவதாக கூறப்படுகிறதே?

அது குறித்து எனக்கு தெரியவில்லை. நான் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு, இப்போது அம்பாளை தரிசிக்க வந்துள்ளேன். இப்போது உங்களை சந்திக்கிறேன், நாளை கோட்டையில் அனைவரையும் சந்திப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.