Irfan's Gender Reveals Video: 'பகிரங்க மன்னிப்பு கேட்ட இர்பான்.. தண்டனை உறுதியென சுகாதாரத்துறை தகவல்'-irfans gender reveals video youtuber irfan apologized health department showing seriousness - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Irfan's Gender Reveals Video: 'பகிரங்க மன்னிப்பு கேட்ட இர்பான்.. தண்டனை உறுதியென சுகாதாரத்துறை தகவல்'

Irfan's Gender Reveals Video: 'பகிரங்க மன்னிப்பு கேட்ட இர்பான்.. தண்டனை உறுதியென சுகாதாரத்துறை தகவல்'

Pandeeswari Gurusamy HT Tamil
May 22, 2024 10:52 AM IST

Irfan's Gender Reveals Video: தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளிடம், நான் வீடியோ வெளியிட்டது தவறுதான். அற்காக நான் ஒரு மன்னிப்பு கடிதம் வெளியிட தயாராக இருக்கிறேன். மன்னிப்பு வீடியோவும் வெளியிடுகிறோன் என்று தெரிவித்தார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளனர்.

மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.. தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை!
மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.. தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை! (Irfan's view)

பிரபல யூடியூபரான இர்பானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து, அதனை வீடியோவாக வெளியிட்டு வந்தார். இதன் மூலம் பிரபலம் ஆனார். சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வரும் இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான சர்ப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் யூடியூபர் இர்பானுக்கும் ஆலியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கர்பமடைந்த மனைவி

இர்பானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் என்ன பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிய இந்த தம்பதி துபாய்க்கு சென்றுள்ளனர். அங்கு தனது மனைவியின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து இர்பான் அறிந்து கொண்டார்.

இந்தியவில் அனுமதி இல்லை

குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பதற்கு இந்தியாவில் இது அனுமதி கிடையாது. வெளிநாட்டில் இது சாதாரணம், நமது ஊரில் கூட இது சாதாரணமாக இருந்தது ஆனால் அதற்கு பிறகு இது நிறுத்தப்பட்டு விட்டது. 1993இல் நான் பிறக்கும்போது கூட நான் என்ன பாலினம் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். ஆனால் அதற்கு பிறகு இதை அரசு தடை செய்தது’ என்று இர்பான் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என சொல்கிறார். அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று சொல்கிறார். இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார். இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை இர்பான் அறிவித்தார்.

இர்பான் மீது நடவடிக்கை

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறியவும், அதை அறிவிக்கவும், நமது நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டத்தை மீறி, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்த யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க, சுகாதாரத்துறை பரிந்துரை செய்தது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

இந்த நிலையில், Youtuber இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனிடையே தனது இர்பான் வியூஸ் என்ற யூடியூப் சேனலில் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை இர்பான் நீக்கி உள்ளார்.

மன்னிப்பு கேட்ட இர்பான்

இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோரி உள்ளார். தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளிடம், நான் வீடியோ வெளியிட்டது தவறுதான். அற்காக நான் ஒரு மன்னிப்பு கடிதம் வெளியிட தயாராக இருக்கிறேன். மன்னிப்பு வீடியோவும் வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார். ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளனர். 

முறையாக வழக்கறிஞர் மூலம் கடிதம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.