Veranda: ’200 கோடி வருவாய்! காலேஜ் போகாம சாதிக்கலாம்; ஆனால் கல்வி இல்லாம சாதிக்க முடியாது!’ சுரேஷ் கல்பாத்தி பேட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Veranda: ’200 கோடி வருவாய்! காலேஜ் போகாம சாதிக்கலாம்; ஆனால் கல்வி இல்லாம சாதிக்க முடியாது!’ சுரேஷ் கல்பாத்தி பேட்டி!

Veranda: ’200 கோடி வருவாய்! காலேஜ் போகாம சாதிக்கலாம்; ஆனால் கல்வி இல்லாம சாதிக்க முடியாது!’ சுரேஷ் கல்பாத்தி பேட்டி!

Kathiravan V HT Tamil
Nov 10, 2023 06:15 AM IST

“சென்ற ஆண்டில் 200 கோடி விற்பனை நடந்தது இந்த ஆண்டில் 400 கோடி அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் முயற்சி”

சுரேஷ் கல்பாத்தி, தலைமை செயல் அதிகாரி, Veranda Learning Solutions Ltd
சுரேஷ் கல்பாத்தி, தலைமை செயல் அதிகாரி, Veranda Learning Solutions Ltd

கேள்வி:- உங்கள் காலத்தில் ’ஐஐடி’ என்றால் என்ன என்று எனக்கு தெரியவில்லை என்று நேர்காணல் ஒன்றில் சொல்லி இருந்தீர்கள். உங்கள் தலைமுறைக்கும் இப்போதைய தலைமுறைக்கும் ’ஐஐடி’ மீதான புரிதல் எந்த அளவுக்கு மாறி உள்ளது?

அப்போ ’இண்டர்நெட்’ உள்ளிட்டவை இல்லாததால் ’ஐஐடி’ குறித்து தெரியாமல் இருந்தது. இந்த காலத்தில் இண்டர்நெட், சோஷியல் மீடியாக்கள் உள்ளதால் ’ஐஐடி’ குறித்து தெரிந்தவர்கள் பலபேர் உள்ளார்கள். ஐஐடி பற்றி எல்லோருக்கும் தெரியவந்துள்ளதா என்றால் இல்லை; ஆனால் நிறைய பேருக்கு தெரிய வந்துள்ளது.

கேள்வி:- வெரண்டா நிறுவனத்தின் கல்விசார்ந்த செயல்பாடுகள் தற்போது எப்படி உள்ளது?

கோவிட் காலத்தில்தான் வெராண்டா நிறுவனத்தை தொடங்கினோம். அப்போது ஆன்லைனில் படித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ஆன்லைனில் விரும்பி படித்தார்களா என்றால் இல்லை. அப்படி ஆன்லைன் சார்ந்து தொடங்கப்பட்ட கல்வி தொழில்கள் தற்போது நிறைய சிரமங்களை சந்தித்து வருகின்றன. இப்போது மீண்டும் வகுப்பறைக்கு செல்ல பலர் விரும்புகிறார்கள். ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்த பலர் ஆப் லைனில் படிக்க தொடங்கி உள்ளனர்.

கேள்வி: நேரடியாக வகுப்பறைக்கு வந்து படிக்க நினைப்பவர்களுக்காக வெரண்டா செய்துள்ள அம்சங்கள் என்ன?

ஆன்லைனில் படிக்க வேண்டுமா இல்லை ஆஃப் லைனில் படிக்க வேண்டுமா என முடிவு செய்ய வேண்டியது மாணவர்கள்தான். எங்களின் எல்லா பாடத்திட்டங்களும் ஆன்லைனிலும் ஆஃப் லைனிலும் உள்ளது. இந்திய முழுவதும் எங்களுக்கு 300 முதல் 400 இடங்களில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. அங்கு சென்று படிக்க விரும்புவோர் படிக்கலாம்.

கேள்வி:- மாநில மொழிகளில் பாடத்திட்டங்களை கொடுத்து வருகிறீர்கள். அதற்கான வரவேற்பு எப்படி உள்ளது?

கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் எல்லா தேர்வுகளையும் மலையாளத்தில் மாற்றிவிட்டார்கள். இனி ஆங்கிலத்தில் அந்த தேர்வை எழுதவே முடியாது. அந்த மொழி தெரிந்தால்தான் கேரளாவில் அரசு தேர்வையே எழுத முடியும்.

தமிழ்நாட்டில் தமிழிலும், ஆங்கிலத்திலும் அரசுத் தேர்வை எழுதி வருகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் தேர்வுகளை எழுதுபவர்களுக்கும் நாம் நடத்தும் பாடங்களை ஆங்கிலத்துடன் சேர்த்து தமிழில் நடத்தினால் நன்றாக புரிந்து கொள்கிறார்கள்.

கேள்வி:- வெரண்டா நிறுவனத்தின் அடுத்த இலக்கு என்ன?

ஒரு மாணவரின் கல்வி பயணத்தில் ப்ரீ ஸ்கூலில் தொடங்கி வேலைக்கு செல்லும் வரை ஒரே நிறுவனத்தின் மூலம் மட்டுமே தரமான கல்வியை தர முடியுமா என்பதுதான் எங்களின் முயற்சியாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது முழுமை அடையும்.

கேள்வி:- Entertainment, Education என இரண்டு துறைகளிலும் செயல்படும் அனுபவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

நமது ஊரில் படிப்பிற்கு இங்கு மிகவும் முக்கியத்துவம் தருகிறார்கள். படிப்பால் முன்னேறிய மக்கள் நம் ஊரில் அதிகம். கல்விக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கிராமங்களில் செலவு செய்கிறார்கள். 200 ரூபாய் இருந்தால் ஒரு படத்தை பார்க்க முடியும்.

படிப்பு என்பது வாழ்கையில் சீரியஸ் ஆன விஷயம், ஆனால் எப்போதுமே வாழ்கையில் சீரியஸ் ஆக இருக்க முடியாது. அதற்குதான் சினிமா தேவைப்படுகிறது.

கேள்வி:- இந்த காலத்தில் படிப்பு இல்லாமலும் சாதிக்கலாம் என சொல்பவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கல்வி என்பது பள்ளிக்கு மட்டும் சென்று படிப்பது அல்ல; பகுத்தறிவும் கல்விதான். ஒரு குழந்தை தாய் தந்தையிடமும், சுற்றம் சூழ்நிலையில் இருந்தும் நிறைய கற்றல்களை கற்று வருகிறது. அதுவும் கல்விதான்.

கல்லூரி படிப்பை முடிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்கையில் சாதித்துள்ளார். ஆனால் கல்வியே இல்லாமல் சாதிக்க முடியாது. காலேஜ் செல்லாம் சிலர் சாதித்து உள்ளார்கள். ஆனால் அந்த கல்வியை காலேஜ் சென்றுதான் கற்றுக் கொள்ள வேண்டுமா என்பது கேள்வி.

கேள்வி:- வெரண்டா நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகிறது. எதிர்பார்ப்புகள் எப்படி உள்ளது?

கடந்த ஆண்டை பார்க்கும்போது 200 கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளோம். இந்த ஆண்டில் EBITDA (வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடன் அடைப்புக்கு பிறகான வருவாய்) பாசிடிவ் நிலைக்கு வந்துள்ளது. இந்த காலாண்டில் 16 கோடி வரை EBITDA உள்ளது.

இந்த ஆண்டு 65 கோடி வரை வருவாய் ஈட்ட உள்ளோம். சென்ற ஆண்டில் 200 கோடி விற்பனை நடந்தது இந்த ஆண்டில் 400 கோடி அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்கள் முயற்சி. சென்ற காலாண்டில் 70 கோடி வரை விற்பனை செய்து இருந்தோம். இந்த காலாண்டில் 100 கோடி வரை விற்பனை நடந்துள்ளது. எங்கள் இலக்கான 400 கோடி இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.