BJP: ’யார் அந்த சார்?’ என்ற பெயரில் ஒரு படமே எடுக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளாசல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp: ’யார் அந்த சார்?’ என்ற பெயரில் ஒரு படமே எடுக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளாசல்!

BJP: ’யார் அந்த சார்?’ என்ற பெயரில் ஒரு படமே எடுக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளாசல்!

Kathiravan V HT Tamil
Jan 06, 2025 01:12 PM IST

ஆளுநர் உரையை படிக்கவிடவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனேயே, தேசிய கீதம் இசைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாகவே எல்லோரும் ஆளுநரை முற்றுகையிட்டனர். அதனால் ஆளுநர் வெளியே வந்துவிட்டார் என நயினார் நாகேந்திரன் பேட்டி

BJP: ’யார் அந்த சார்?’ என்ற பெயரில் ஒரு படமே எடுக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளாசல்!
BJP: ’யார் அந்த சார்?’ என்ற பெயரில் ஒரு படமே எடுக்கலாம்! பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் விளாசல்!

உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் இன்று தொடங்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகாக தலைமை செயலகம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பின்னர் அதிமுக உறுப்பினர்கள் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், தவாக தலைவர் வேல்முருகனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தரை நியமனம் செய்யாததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். ஆனால் நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கும் மரபு உள்ளதால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை.

இதனை காரணம் காட்டி ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து கோஷம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு 

இதனை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகியோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையை கடித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்து உள்ளோம். குற்றம்செய்த நபர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். அவர் மீது 18 வழக்குகள் உள்ளது, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. 

குற்றவாளி போனை ஏரோ பிளைன் மோட்டில் போட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார். இதெல்லாம் கேலிக்கூத்தான விஷயம். அரசு இதனை கண்டுகொள்ளவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்ட விடுதி நடக்கிறதா என்று கேள்வி எழுகிறது. 

இரவு 8 மணிக்கு எப்படி குற்றவாளி அங்கு வந்தார் என்பது கேள்விக்குறி, இது திட்டமிட்டு நடந்த பாலியல் வன்கொடுமையாக தெரிகிறது. இப்போது தமிழ்நாடு முழுவதும் எழக்கூடிய கேள்வியாக ‘யார் அந்த சார்?’ என்று உள்ளது.  யார் அந்த சார்? என்ற தலைப்பில் ஒரு சினிமா படமே எடுக்கலாம் போல, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என கூறினார். 

 

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.