தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Inspector Punished For Getting Bribe From Farmer

Court Judgement : விவசாயிடம் லஞ்சம் – இன்ஸ்பெக்டர் நிலைமை என்னாச்சு பாருங்க…

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 03:41 PM IST

அடிதடி வழக்கில் விவசாயியை சிறைக்கு அனுப்பாமல் காவல் நிலைய பிணையில் விட 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முன்னாள் சிறுகனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து இன்று திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற பொறிவைப்பு நடவடிக்கையின்போது, சீனிவாசனிடம் லஞ்ச பணம் ரூ.6 ஆயிரம் கேட்டு பெற்றது தொடர்பாக அவர் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் விசாரணை முடிந்து, திருச்சி, ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார். அதில் செல்வராஜ், லஞ்ச கேட்டு பணம் பெற்ற குற்றத்திற்காக ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் மற்றும் அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். 

இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேஷ், சிறப்பாக செயல்பட்டு செல்வராஜை பொறிவைத்து பிடித்தார். முன்னாள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அம்பிகாபதி, புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும் மற்றும் ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அரசு சிறப்பு வக்கீல் சுரேஷ்குமார் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்துள்ளார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்