Rip SM Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!-indian tawheed jamaat state president sm parker passed away political leaders condole - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rip Sm Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Rip SM Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Divya Sekar HT Tamil
Jun 21, 2024 11:27 AM IST

Rip SM Parker : இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!
இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் காலமானார்.. அரசியல் தலைவர்கள் இரங்கல்!

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம்.பார்க்கர் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், அமைப்பினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

அதேபோல தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல்

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரான எஸ்.எம். பாக்கர் சிறந்த பேச்சாளர். அனைத்து சமூகங்களுடனும் இஸ்லாமியர்கள் நல்லுறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். 

பழனிபாபாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது மதிப்பும் பற்றும் கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்திற்கு பல முறை வந்து மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து உரையாடியவர். பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் என்னுடன் கலந்து கொண்டவர். அவரது மறைவு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு பேரிழப்பாகும்.

எஸ்.எம். பாக்கர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.cச்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல்

அதேபோல தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

”இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனத் தலைவரும், சமூகச்செயற்பாட்டாளரும், ஊடகவியலாளருமான அண்ணன் எஸ்.எம். பாக்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான அண்ணன் பாக்கர் அவர்கள், இசுலாமியப் பெருமக்களின் நல்வாழ்வாழ்விற்கும், அடிப்படை உரிமைக்கும் ஆதரவாகவும், அவர்கள் மீதான அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வாழ்நாள் முழுவதும் களத்தில் முன்நின்று போராடிய சமரசமற்ற போராளியாவார். 

என்மீது பேரன்புகொண்ட அண்ணன் பாக்கர்

இசுலாமியப் பெருமக்கள் சட்டத்தின் பெயரால் ஒடுக்கப்படும் போதெல்லாம் அவரது குரல் முதலாவதாக ஓங்கி ஒலிக்கும். நீண்டகால சிறைவாசிகளின் விடுதலைக்காக பாடுபட்ட அவரது அர்ப்பணிப்புமிக்கப் பெருவாழ்வு மனித உரிமை போற்றும் அனைவராலும் என்றென்றும் நினைவுக்கூரப்படும். தனிபட்ட முறையில் என்மீது பேரன்புகொண்ட அண்ணன் பாக்கர் அவர்களின் திடீர் மறைவு என் மனதினை மிகவும் துயருறச் செய்கிறது.

அண்ணன் பாக்கர் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், மனித உரிமை. போராளிகளுக்கும், இசுலாமியப் பெருமக்களுக்கும், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அண்ணன் பாக்கர் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!” என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.