'விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவர்?’: நாளை சென்னை வரும் அமித் ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பார் என தகவல்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவர்?’: நாளை சென்னை வரும் அமித் ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பார் என தகவல்

'விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவர்?’: நாளை சென்னை வரும் அமித் ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பார் என தகவல்

Marimuthu M HT Tamil Published Apr 09, 2025 03:12 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 09, 2025 03:12 PM IST

நாளை சென்னை வரும் மத்திய உள்துறை அமித் ஷா, பல முக்கிய முடிவுகளை அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

'விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவர்?’: நாளை சென்னை வரும்  அமித் ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பார் என தகவல்
'விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவர்?’: நாளை சென்னை வரும் அமித் ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பார் என தகவல்

நாளை இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் மத்திய உள்துறை அமித் ஷா, ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்குகிறார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 11ஆம் தேதி காலை சென்னையில் இருக்கும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார், மத்திய அமைச்சர் அமித் ஷா.

இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வர இருக்கிறார். குறிப்பாக, நாளை மாலை ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தனி விமான மூலம் கிளம்பும் அமித் ஷா, நாளை இரவு 10:30 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின், சென்னை கிண்டியில் இருக்கும் ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்க இருக்கிறார்.

இரண்டு நாள் பயணமாக அவர் சென்னை வரவிருக்கும்நிலையில், தொடர்ந்து பாஜகவினுடைய மாநில முக்கிய நிர்வாகிகள் எல்லோரையும் சந்திக்க இருக்கிறார். 

அரசியல் முக்கியத்துவம் பெறும் அமித் ஷாவின் வருகை:

கூடிய விரைவில் புதிய பாஜக மாநிலத் தலைவர் அறிவிக்கக் கூடிய சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுதினம் ஏப்ரல் 11ஆம் தேதி புதிய பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கூட்டணி குறித்தும் அமித் ஷா பேச வாய்ப்பு எனத் தகவல்:

மேலும் அதிமுகவுடனான கூட்டணி குறித்தும் பேசயிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பிரிந்துகிடந்த அதிமுக அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.