காஷ்மீர் தாக்குதல்: ’சிந்து நதியை தடுத்து பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்ற செயல்!’ பாஜகவை விளாசும் சீமான்!
”சிந்து, கங்கை, யமுனை, கோதாவரி, காவேரி என்று எல்லா நதிகளுக்கும் பெண்களின் பெயரைச்சூட்டி நதிகளை தெய்வமாக வணங்கும் நாடு, மனிதனின் தீராத பாவங்கள் எல்லாம் கங்கை நதியில் மூழ்கினால் தீரும் என்று நம்புகின்ற நாடு, நதிநீரை தடுத்து கோடிக்கணக்கான மக்களை கடுமையாக தண்டிப்பது முறைதானா?”

காஷ்மீர் தாக்குதல்: ’சிந்து நதியை தடுத்து பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்ற செயல்!’ பாஜகவை விளாசும் சீமான்!
30 கோடி மக்களின் வாழ்வாதாராமாக விளங்கும் சிந்து நதியைத் தடுத்து நிறுத்தும் முடிவை இந்திய ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் மக்களை தண்டிப்பது நியாயமற்றது
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு சிந்து நதியைத் தடுத்து நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.