Tamil News  /  Tamilnadu  /  India Unveiled: Marco Polo's Chronicles Of Riches, Religion, And Culture

Marco Polo: ’உலகின் சிறந்த நாடு!’ மார்கோ போலோ தமிழ்நாட்டை பற்றி சொன்னது என்ன?

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 07:30 AM IST

”அமெரிக்காவை கண்டுபிடித்த மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் கூட இந்த புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்ததாக தகவல்கள் உண்டு”

மார்கோ போலோ
மார்கோ போலோ

ட்ரெண்டிங் செய்திகள்

தனது தந்தை நிலோலோ மற்றும் அவரது மாமா மாஃபியோ ஆகியோரிடம் இருந்து வியாபாரத்தை கற்றுக் கொண்ட மார்கோ போலோ,  1271 ஆம் ஆண்டில் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் வணிகப்பாதையான பட்டுப்பாதை வழியாக தனது பயணத்தை தொடங்கினார். பாலைவனங்கள், மலைகள் மற்றும் பல்வேறு பிரதேசங்கள் வழியாக தொடர்ந்த அவரது பயணம்  இறுதியில் இந்தியாவின் கம்பீரமான நிலங்களை வந்தடைந்தது.

இந்தியாவின் வளமான கலாச்சாரம் மார்கோ போலோவை வசீகரித்தது. அவர் கண்ட அற்புதங்கள் - இந்திய நகரங்களின் செழுமை, மொழிகளின் பன்முகத்தன்மை, மசாலா பொருட்கள், மேம்பட்ட நீர்ப்பாசன முறைகள் மற்றும் செழிப்பான வர்த்தகத்தை அவர் ஆச்சரியப்பட்டார்.

இந்தியாவில் அவர் சந்தித்த மத மற்றும் கலாச்சார நடைமுறைகளால் ஆய்வாளர் ஈர்க்கப்பட்டார். அவர் இந்து மதம், பௌத்தம் மற்றும் ஜைன மதத்தின் பழக்கவழக்கங்களை ஆவணப்படுத்தியதுடன் கோயில்கள் மற்றும் புனித தளங்களின் கட்டிடக்கலை அதிசயங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் மார்கோ போலோ!

மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கையின் அரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு மார்கோ போலோ பாண்டிய நாட்டுக்கு வந்தார்.  

அப்போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இவரது ஆட்சியில் பாண்டிய நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும், இந்தியாவின் நிர்வாகம், வர்த்தக நடைமுறைகள் மற்றும் மிளகு, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்கள் உட்பட இயற்கை வளங்கள் பற்றிய அவரது விரிவான விளக்கங்கள், ஐரோப்பிய வணிகர்களிடையே  இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்ற பெரும் ஆர்வத்தைத் தூண்டின.

இருப்பினும், போலோவின் எழுத்துக்கள் அவற்றின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்பட்டன, சில அறிஞர்கள் அவரது பயணங்களின் அளவைப் பற்றி விவாதித்தனர், மேலும் அவர் கூறிய அனைத்தையும் அவர் தனிப்பட்ட முறையில் பார்த்தாரா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற வாதங்களும் முன் வைக்கப்படுகிறது.  

இறுதியாக 1298ஆம் ஆண்டு வெனிஸ் நகருக்கும் - ஜினோவாவுக்கும் இடையே நடந்த போர் காரணமாக மார்கோ போலோ சிறைப்பிடிக்கப்பட்டார்.  தான் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் தனது அறையில் இருந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதினார்.

மார்கோ போலோ இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் கருதிய நிலையில் 24 ஆண்டுகள் கழித்து 1299ஆம் ஆண்டில் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெனிஸ் நகரை அடைந்தார்.  திட்டதிட்ட 24 ஆண்டுகளில் அவர் 24 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் அவர் பயணம் செய்து இருந்தார். 

1300ஆம் ஆண்டில் திருணம் செய்து கொண்ட மார்கோ போலோவுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்தன.  பெரும் செல்வந்தராக அவரது வாழ்கை கழிந்தது.  உடல்நிலை பாதிக்கப்பட்ட மார்கோ போலா 1324ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி உயிரிழந்தார்.

மார்கோ போலோவின் பயண குறிப்புகளில் உள்ள விடையங்களை பலரும் முழுமையாக ஏற்கத் தவறினாலும், மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது.  அமெரிக்காவை கண்டுபிடித்த மாலுமி கிறிஸ்டோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்ததாக  தகவல்கள் உண்டு.

WhatsApp channel

டாபிக்ஸ்