Slender loris Sanctuary: தமிழகத்தில் முதல் தேவாங்கு சரணாலயம் !
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Slender Loris Sanctuary: தமிழகத்தில் முதல் தேவாங்கு சரணாலயம் !

Slender loris Sanctuary: தமிழகத்தில் முதல் தேவாங்கு சரணாலயம் !

Suriyakumar Jayabalan HT Tamil
Oct 12, 2022 03:59 PM IST

இந்தியாவிலேயே முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

<p>தேவாங்கு சரணாலயம்</p>
<p>தேவாங்கு சரணாலயம்</p>

இந்த இந்த தேவாங்குகள் வாழ்க்கையில் பெரும் பகுதியை மரங்களிலேயே கழிக்கின்றன. விவசாயிகளுக்கு நண்பனாக விளங்கும் இந்த தேவாங்குகள் பயிர்களைச் சேதம் செய்யும் பூச்சிகளை வேட்டையாடி சாப்பிடுகின்றன.

சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பில் இந்த தேவாங்குகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த தேவாங்கு இனம் அழிந்து வரும் இனம் என்று இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்டுள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

இந்த உயிரினங்களின் வாழ்விடத்தை மேம்படுத்துதல், அச்சுறுத்தல் தனித்தல், பாதுகாத்தல், ஆகியவற்றின் மூலமாக இவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இயலும். 

இதனைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.