Independence Day 2024: 'நமது பன்முக தன்மையின் அடையாளம் தேசியக் கொடி' விடுதலை வீரர்களை வணங்கி உரையை தொடங்கினார் முதல்வர்
Independence Day 2024: "மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு" என்றார்.
நாட்டின் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கான உரையை ஆற்றினார். இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக சென்னை சார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தலைமைச் செயலகத்திற்கு எதிரில் முக்கிய விருந்தினர்கள் பார்வையிடும் வகையில் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து அவர் தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தி வருகிறார்.
"மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன்.
தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு" என்றார்.
முதல்வர் உரையின் முக்கிய அம்சங்கள்
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றேன். விடுதலை பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம். 300 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர் கிடைத்த சுதந்திரம் இது. அவர்கள் போராடிய நோக்கத்திற்காக நாம் தொடர்ந்து உழைப்போம். நேதாஜி படை நடத்திய போது கரம் கோர்த்தவர் நமது தமிழர்கள். நாட்டின் பன்முகத்தன்மையின் அடையாளம் நமது தேசியக்கொடி விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர் என்பதை நினைவு கூர்ந்தார்.
சுதந்திர தின உரையின் போது வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்
குறைந்த விலையில் மருந்துகள் வழங்கும் முதல்வர் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள் தொடங்கப்படும்.
முன்னாள் ராணுவ வீரர்களின் நலம் காக்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தியாகிகள் ஓய்வூதியம் ரூபாய் 21,000 ஆக உயர்த்தப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 11,500 ஆக அதிகரிக்கப்படும்
வயநாடு சம்பவத்தின் எதிரொலியாக நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
விருது பெற்றோர் விபரம்
அப்துல் கலாம் விருது சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்து வேலுவிற்கு வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்த செவிலியர் சபீனாவிற்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
சிறப்பு பணிக்கான முதலமைச்சர் விருதை முதலமைச்சரின் முகவரி துறையின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி வனிதா, பொது நூலகங்கள் இயக்குனர் இளம் பகவத் ஐஏஎஸ், சுகாதாரத் துறையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி ஐஏஎஸ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்சன்ட் திவ்யா ஐஏஎஸ் ஆகியோர் பெற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு உதவியதற்கு செங்கல்பட்டு விஜயலட்சுமி, சென்னை ஜெயலட்சுமி, சூசை அந்தோணி, தூத்துக்குடி சந்தானம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியை சேர்ந்த சிவமலர் ஆகியோர் விருது பெற்றனர். பெண்கள் நலனுக்காக சிறந்த சேவைக்கான விருதை சென்னை மீனா சுப்பிரமணியன், மதுரை ஐஸ்வரியம் அறக்கட்டளை பால குருசாமி ஆகியோர் பெற்றனர்.
இதேபோல் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதை, ஈரோடு கதிரவன், கன்னியாகுமரி ஜோசன் ரெகோபர்ட், கடலூர் ஜெயராஜ், நிகிதா, புதுக்கோட்டை கவின் பாரதி, விருதுநகர் உமாதேவி, ராமநாதபுரம் ஆயிஷா பர்வீன் ஆகியோர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்