கூட்டணிக்கு குறி வைக்கப்படுகிறாரா எடப்பாடி பழனிசாமி? உறவினர் வீடுகளில் ஐடி ரெய்டு!
ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள என். ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள என். ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
என்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தை என்.ராமலிங்கம் நடத்தி வருகிறார். சாலைகள் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு மட்டுமின்றி கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறையை சேர்ந்த தொழிலதிபதிபர் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டில் இருந்து தனது மகனுக்கு எடப்பாடி பழனிசாமி பெண் எடுத்து உள்ளார். என்.ராமலிங்கத்தின் இளைய மகனுக்கும், தொழிலதிபர் சுப்பிரமணியனின் இளைய மகளுக்கும் திருமணம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இபிஎஸ்.,க்கு நெருக்கானவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தியிருக்கும் நிலையில், இன்றைய ரெய்டு, பாஜக கூட்டணிக்கான அழுத்தமாகவும் அரசியல் பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதற்கிடையில், இன்றைய சட்டமன்ற நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதன் பின்னணியில் ரெய்டு இருக்குமா? என்கிற காரணமும் பலரிடமும் எழுந்துள்ளது.