தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Income Tax Officials Investigate At Minister Senthil Balaji's Brother's House

IT Raid: செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் வருமான வரித்துறை விசாரணை!

Kathiravan V HT Tamil
Jan 11, 2024 08:51 AM IST

”Senthil Balaji: நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் இன்று அவரது செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடக்கிறது”

அசோக் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி
அசோக் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டபோது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு எதிராக ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2ஆவது முறையாக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள செந்தில் பாலாஜியின் மனு மீது நாளை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. 

இந்த நிலையில், கரூரில் புதியதாக கட்டி வரும் வீட்டின் மதிப்பு, பரப்பளவு, செய்யப்பட்டுள்ள செலவுகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்து வருகின்றனர். நேற்றைய தினம் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் உணவகத்தில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் இன்று அவரது செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை நடக்கிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வர உள்ள நிலையில் வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்